• Breaking News

    வீதிகளில் கட்டப்படும் மாடுகள் ஏலத்தில் விடப்படும் - தவிசாளர் எச்சரிக்கை!

     


    வலி. மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் கட்டப்படும் மாடுகள் ஏலத்தில் விட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    சங்கானை - விழிசிட்டி 1ஆம் வீதியில் மாடுகள் தொடர்ந்து கட்டப்படுவதால் வீதியால் பயணம் செய்பவர்கள் பல்வேறு சிரமங்களையும் விபத்துக்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. குறித்த வீதியில் மாடுகளை கட்டுவதனால் நேற்றும்(17) 3 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில் இன்று (18) காலை அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதேச சபையின் ஊழியர்கள் நிலைமைகளை பார்வையிட்டு மாடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு தவிசாளருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து தவிசாளர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad