நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கு கௌரவிப்பு...!
பேருந்தில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனர் நேற்று கௌரிவிக்கப்பட்டனர்.
வவுனியா - யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணித்த கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண் ஒருவர் 5 பவுணுக்கு மேற்பட்ட தாலிக்கொடி, வங்கி புத்தகங்கள் உட்பட்டவற்றை பேருந்தில் தவறவிட்டிருந்தார்.
அதனை பார்வையிட்ட தனியார் பேருந்தின் நடத்துனர் கே.ஜீவானந்தபவன், சாரதி பி.கிறிஸ்டி ஆகியோர் கைவிடப்பட்ட குறித்த கைப்பையை வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
அதனை உறுதிப்படுத்திய பின்னர் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து அந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மனித நேயப்பணியினை முன்னெடுத்த சாரதி, நடத்துனர் இருவரும் பொது அமைப்புக்களால் நேற்று (21) கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டதுடன், நிகழ்வில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சிகையலங்கரிப்பாளர் சங்கம் உட்பட பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை