உயிரிழந்த ஆளுநருக்கு பதிலாக உயிரோடிருக்கும் ஆளுநருக்கு அனுதாப பதாகை வெளியிட்ட பிரதேசசபை...!
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கான அனுதாப பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அவ்வாறே ராஜா கொல்லூரேவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வாரியபொல பிரதேச சபையின் தலைவர், செயலாளர் மற்றும் சபையின் உறுப்பினர்கள் பதாகையொன்றை காட்சிப்படுத்தினர்.இந்த பதாதையில் உயிரிழந்த ராஜா கொல்லுரேயின் புகைப்படத்திற்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும், ஊவா மாகாணத்தின் தற்போதைய ஆளுநருமான ஏ.ஜே.எம் முஸம்மிலின் புகைப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு தவறுதலாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய ஊவா மாகாண ஆளுநருமான மொஹம்மட் முஸம்மிலின் குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை