புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
குறைந்த அளவான திருத்தங்களுடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று(26) கண்டி - அக்குறனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், எதிர்வரும் புதன்கிழமை முதல் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளினது நன்மை தொடர்பில் சிந்தித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.
கருத்துகள் இல்லை