• Breaking News

    யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் பொலிஸாரால் கைது...!

     


    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு, பிரசவம் பார்த்ததாக கூறப்படும் சம்பவத்தில், குழந்தை உயிரிழந்த நிலையில் கணவர் லோகநாதனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி கோமதி கருவுற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட நாளில் கோமதிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத லோகநாதன் தனது சகோதரி கீதா உதவியுடன் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக சொல்லப்படும் நிலையில், இரத்தப்போக்கு அதிகமான கோமதிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad