• Breaking News

    மட்டுவில் வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் நினைவு தினம்

     


    மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின்  ஸ்தாபகர், அமரர் பொன் நாகமணி அவர்களின் 25 வது ஆண்டு நினைவுதினமும் முதியோர் கெளவரவிப்பு நிகழ்வும் நாளை (26) இடம்பெறவுள்ளது.

    சனசமூக நிலையத்தலைவர் க.திவாகர் தலைமையில் நாளை மாலை 3.30 மணியளவில் வளர்மதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

    இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கனகராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.சுவீட்டா மற்றும் மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி.த.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

    கெளரவ விருந்தினராக டென்மார்க் வாழ் நிலைய அங்கத்தவர் கு.லிதராஜ் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

    நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்றுக்காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும், குறிப்பாக முகக்கவசம் அணிந்து நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad