வட்டுக்கோட்டை - சங்கரத்தையில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது...!
அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை காளி கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் இருந்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இன்று காலை சமையல் முடித்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வந்தவேளை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
எனினும் குறித்த சம்பவத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை