புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீசை, தாடி வளர்க்கத் தடை?
புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீசை மற்றும் தாடியுடன் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வு, பயங்கரவாத விசாரணை மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்ற பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றி வரும் அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் தாடி மற்றும் மீசை வளர்க்கவோ அல்லது முடி வளர்க்கவோ அனுமதி அளிக்கப்படாது.
தாடி, மீசை, தலை மயிர் என்பனவற்றை சீராக வெட்டி, சீருடையில் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
புலனாய்வுத் தகவல்களை திரட்டிக் கொள்வதற்காக மாறு வேடத்தில் செல்லும் நோக்கில் குறித்த பிரிவு உத்தியோகத்தர்கள் தாடி, மீசையுடனும், தலை மயிர் வளர்த்துக் கொண்டும் கடமையில் ஈடுபடுவார்கள்.
புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று கடமைக்கு சமூமகளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை