மைத்திரி தரப்பு எடுத்துள்ள அதிரடி முடிவால் ஆட்டம்காணுமா கோட்டா அரசு...?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்த நேரத்திலும் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, அரசாங்கத்துடன் தொடர்புடைய பல கட்சிகளைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை