• Breaking News

    வைகைப்புயல் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

     


    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக "நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்" எனும் படத்தில் நடித்து வருகின்றார்.

    இப் படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad