மின் விநியோகத்தை தொடர்ந்து நீர் விநியோகமும் தடை...!
நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையின் காரணமாக இவ்வாறு நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த மின்தடை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை