மீன்பிடி படகிலும் திடீரென வெடித்தது எரிவாயு சிலிண்டர்...!
தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று நேற்று (டிச.7) நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
குறித்த விசைப்படகு கடந்த 4ஆம் திகதி துறைமுகத்திற்கு வந்திருந்த நிலையில் பொறிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான "ஜெயநெது நெதுஷா" என்ற பல்லாண்டு மீன்பிடி படகே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
விசைப்படகில் தீ பரவியதில் மற்றுமொரு பல நாள் மீன்பிடி படகும் சேதமடைந்தது. கப்பலை சுத்தம் செய்யும் போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக படகில் இருந்த ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
குடாவெல்ல மீன்பிடி துறைமுக மீனவர்கள் மற்றும் தங்காலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைத்த போதிலும் படகு தீயில் பலத்த சேதமடைந்தது. தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை