இலங்கையின் மொத்தக் கடனையும் நான் அடைக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுமா ஐக்கிய நாடுகள் சபை? போராட்டத்தில் குதித்த தனிநபர்
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.
இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.
குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து குறித்த நபர் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை