மின்சார தடையினால் மின் தூக்கியில் (லிஃப்ட்) சிக்கிய எம்.பிக்கள்...!
நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஏறக்குறைய 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோர் மின்தூக்கியில் சிக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட போது நாடாளுமன்ற வளாகத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதுடன், இதன்போது மின்தூக்கியும் செயற்பாடும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலிடம்வினவிய போது, தானும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல ஆகியோரும் சுமார் 20 நிமிடம் மின்தூக்கியில் சிக்கி கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் உயிருக்கு பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவிடம் வினவிய போது, குறித்த விடயம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதால் அது தொடர்பில் அவதானிப்பதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை