யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நாளை லண்டனிற்கு பயணம்!
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் நாளையதினம் இலண்டன் பயணிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
லண்டனில் சில மாதங்களில் எனது பயிற்சியை முடித்தபின் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கடமைக்கு திரும்பவுள்ளேன்.
இக்காலப்பகுதிக்கு தற்காலிக பணிப்பாளர் ஒருவரை சுகாதார அமைச்சு எதிர்வரும் நாட்களில் நியமனம் செய்யும் போது அவர் கடமைகளை பொறுப்பேற்பார்.
போதனா வைத்தியசாலையின் சேவைகள் மிகவும் முக்கியமானதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும்.
ஆகவே இச்சேவை சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை