• Breaking News

    வட்டுக்கோட்டையில் விபத்து - இவர் மருத்துவமனையில் அனுமதிப்பு!

     வட்டுக்கோட்டை - அராலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

    இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

    அராலி தோப்பச்சி வாசிகசாலைக்கு அருகே சென்றுகொண்டிருந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியும் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.

    இதில் முச்சக்கர வண்டியின் சாரதியும் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


    .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad