• Breaking News

    யாழில் உள்ள ஒல்லாந்தர் கால கோட்டையை கைக்குள் போட்டது சீனா...?

     


    நேற்றையதினம் சீன தூதுவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கு வருகைதந்து பல இடங்களை பார்வையிட்டிருந்தார்.

    அந்தவகையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு வருகைதந்து ஆளுநருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

    அதன்பின்னர் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் உள்ள ஒல்லாந்தர் கால கோட்டையை ஆளுநரும் சீன தூதுவரும்  பார்வையிட்டனர்.

    நேற்றைய ஆளுநருடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு சீன தூதுவர் கி சென் ஹொங்கினை ஊடகவியலாளர்கள் கேட்டபோது கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்காமல் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

    யாழில் உள்ள ஒல்லாந்தர் கால கோட்டையிலும் சீனாவின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad