• Breaking News

    மணமகளை அலங்கரிக்க சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட துயரம் - இருவர் பலி...!

     அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    வேனில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

    திருமண நிகழ்வில் மணமகளை அலங்கரிப்பதற்காக வானில் சிலர் பயணித்ததில் பெண் ஒருவரும் வானின் சாரதியும் உயிரிழந்துள்ளனர். சாரதி நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் உயிரிழந்த பெண் மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து கடற்படைக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad