"நட்புக்காக" மொட்டையடித்துக் கொண்ட பத்து மாணவர்கள்...!
இங்கிலாந்தில் இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தங்கள் நண்பருக்கு ஆதரவாக பத்து வகுப்பு மாணவர்கள் தலை மொட்டையடித்துக்கொண்டனர்.
13 வயதான லியாம் என்ற தமது நண்பருக்காகவே இந்த 10 மாணவர்களும் மொட்டையடித்துக்கொண்டு புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தமது நண்பனுக்காக இதுவரை நன்கொடையாக சுமார் 2,000 பவுண்டுகள் திரட்டியுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் அனைவரும் தங்கள் இலக்குகளை தாண்டி அதிகளவில் நிதியை சேகரித்து வருவதாக மாணவர்களின் வகுப்பு ஆசிரியை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை