முல்லைத்தீவில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த நகரசபை உறுப்பினர்...
இராணுவத்தினால் தாக்குதலுக்குள்ளான ஊடகவியாளரை முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
மாவீரர் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வச்சந்தின் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் இ.தயாபரன் உள்ளிட்டவர்கள் ஊடகவியலாளரின் நலன் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை