அராலியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் விபத்து - இளைஞன் வைத்தியசாலையில்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி செட்டியார் மடம் பகுதியில் இன்றிரவு (27) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அராலி - செட்டியார்மடம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலியை சேர்ந்த 21 வயது இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்துகள் இல்லை