இலங்கையில் பெரும் அவலம் - உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
காலி பெலிகஹா பிரதேசத்தில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக அரிசியை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நேற்று காலை முதல் காலி பெலிகஹா பிரதேசத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அரிசி தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கையில் மக்கள் கிடைத்த அரிசியை வாங்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக மொத்த வியாபாரிகளால் வியாபாரிகளுக்கு குறைந்த அளவான அரிசியே வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை