• Breaking News

    மோட்டார் சைக்கிள் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைது!

     


    முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    இன்று இடம்பெற்ற இக்கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    சுதந்திரபுரம் - கரிசல்வெளி கடற்கரையில் நேற்று (29) மாலை உலங்கு வானூர்தி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

    கஞ்சா கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையக் கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கஞ்சாவினை கடத்தி உந்துருளியில் கடத்தி சென்றுவேளை மூன்று உந்துருளியினையும் நால்வரையும் கைது செய்துள்ளார்கள்.

    இவர்களிடம் இருந்து 89 கிலோ பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் விசவமடு பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் என 44,24,24,30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    இவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய உந்துருளி மூன்றும் மீட்கப்பட்டுள்ளன.

    கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சான்று பொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளதுடன் இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad