• Breaking News

    மாதகலில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கு அச்சுறுத்தல்...!

     


    அண்மைக்காலமாக, மாதகலில் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படும் மக்களுக்கும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் இன்றைய தினம் மாதகல் பகுதி மக்கள், கஞ்சா கடத்திய சந்தேகத்தில் நேற்றைய தினம் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்னர்.

    இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை அங்கிருந்த ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.


    இதன்போது அங்கிருந்த மக்கள் அவரை நேக்கி "நீங்கள் யார் எதற்கு தங்களை காணொளி எடுக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் தான் ஒரு ஊடகவியலாளர் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளர் என்றால் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினர். இருந்தும் அவர் அடையாள அட்டையை காண்பிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad