• Breaking News

    இரண்டு பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவெடுத்து தற்கொலை...!

     


    மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இன்று மாலை பழுகாமம் (சுடலை) மயானத்துக்கு அருகாமையில் உள்ள வீதியில் உள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


    இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராயேந்திரன் இராஜன் (வயது 36) குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 07 தினங்களுக்கு முன்னரே குறித்த நபரின் தந்தை உயிரிழந்திருந்த நிலையில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad