கட்டடத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - தொல்புரத்தில் சம்பவம்...!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மத்தி பகுதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் இன்று மாலை விளையாடிக்கொண்டிருந்தவேளை கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுவன் அவனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்தவேளை திடீரென கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்துள்ளான்.
இந்நிலையில் குறித்த சிறுவன் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை