யாழ். மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இன்று நல்லை ஆதீனத்துடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ கட்டளைத் தளபதிக்கு நல்லை ஆதீனம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தோடு இராணுவ தளபதியினால் நினைவுப் பரிசும் கையளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை