வைத்தியசாலையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு...!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேற்றிரவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலனில் இருந்து வாயு கசிவு வந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் குறித்த வெடிப்பினால் எரிவாயு அடுப்பு இருந்த அறையின் வாயிற்கதவு வெடித்து சிதறியுள்ளதுடன் அதனுள் இருந்த பொருட்களும் முற்றாக எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை