• Breaking News

    தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு...!

     கிளிநொச்சி - பளை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

    இயக்கச்சி முகாவில் பகுதியில் நேற்று (08) அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரை அவதானித்த உறவினர்கள் பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்திருந்த பளை காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதோடு கிளிநொச்சி மாவட்ட நீதவானுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

    குறித்த இளைஞன் 19வயதையுடைய சந்திரகுமார் தமிழரசன் எனவும் இவர் முகாவில் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad