முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு...
முல்லைத்தீவு முள்ளியவளை உரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
அமெரிக்காவில் வசிக்கும் பாலமயூரன் மணிமேகலா தம்பதிகளின் புதல்வி அபிநயாவின் பிறந்த நாளை முன்னிட்டு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், வன்னி மேம்பாட்டுப் பேரவையின் அமைப்பாளர் இ.தயாபரன் மற்றும் இணுவில் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது 30 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை