• Breaking News

    கிளிநொச்சி - கெளதாரிமுனையில் தொல்லியல் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்...!

     


    கிளிநொச்சி பூநகரி கெளதாரிமுனையில் உள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கணேசா ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    குறித்த ஆலயத்தில் வரலாற்றுத்தொன்மையான சான்றுகள் இருக்க கூடும் என்ற ரீதியில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் ஆலய வளாக பகுதியில் அகழ்வு பணியை நேற்றைய தினம் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

    தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாணங்களுக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருனி ஜெயதிலக்கவும் இந்த அகழ்வுப் பணிகளில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad