யாழ். பல்கலை மாணவர்களால் இறுதி நாள் திருவம்பாவை பிரயாணம் முன்னெடுப்பு...!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் பத்து நாட்களாக திருவெம்பாவை விரதம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் மாணிக்கவாசகர் திருவுருவச்சிலை உடன் திருவம்பாவை பிராயணம் பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரா ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட பிரயாணமானது பாலசிங்கம் விடுதயை அடைந்து அதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அடைந்து திருநெல்வேலி சந்திப்பகுதியினூடாக பரமேஸ்வரா சந்தியை வந்தடைந்து பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரா முன்றலில் நிறைவடைந்தது.
இதன்போது மாணவர்களால் திருவம்பாவை பாடல்களும் பஜனைகளும் முன்னெடுக்கப்பட்ட தோடு சூழ உள்ள ஆலயங்களிலும் பதிகங்கள் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து பரமேஸ்வரா முன்றலில் விசேட பூஜை வழிபாடுகளோடு பொங்கல் நிகழ்வுடன் மாணவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள்,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இவ்வாறானதொரு ஆன்மீக செயற்பாடானது இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
எதிர்காலத்திலும் வருகின்ற மாணவர்கள் இதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோடு மேலும் எமக்கு இவ்வாறானதொரு கொரோணா சூழலில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அனுமதியை வழங்கிய பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்களுக்கும் ,மாணிக்கவாசகர் திருவுருவச் சிலையை அன்பளிப்பு செய்து பரிபூரண ஒத்துழைப்பை நல்கிய இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி க்கும், பல்கலை மாணவர் ஒன்றியத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை