• Breaking News

    மேலும் பல இந்திய மீனவர்கள் கைது : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு...!

     


    யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

    அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

    கைதானவர்களில் ஒருவர் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவரை எச்சரிக்கை செய்து பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad