வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். சுன்னாகம் கதிரமலை சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவம்...!
சிவபெருமானுக்கு உரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்றான மார்கழி திருவெம்பாவை உற்சவம் யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
அந்த வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். சுன்னாகம் கதிரமலை சிவன் கோவிலில், மார்கழி திருவெம்பாவை உற்சவம் விசேட அபிசேக ஆராதனைகளுடன் இடம்பெற்று 10 திருவெம்பாவை உற்சவ பாடல்களும் பாடப்பட்டன.
இந்நிகழ்வை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ சிவனேஸ்ர குருக்கள் கணேஸ் சர்மா தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
இதில் நடராஜாப்பெருமான் பிள்ளைத்தண்டு பீடத்தில் வீற்றிருந்து உள்வீதியூடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ் திருவெம்பாவை உற்சவம் எதிர்வரும் 20.12 அன்று நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை