வலி. தென்மேற்கு பிரதேச சபையில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இன்று மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு, தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வலிகாம் தென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. அமர்வின் இடைவேளையின்போது உறுப்பினர்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்தும், எரிவாயு தட்டுப்பாட்டிடனை தீர்க்ககோரியும் விசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. பிரதேச சபை உறுப்பினர்கள் சபை முன்பாக இந்த கவனயீ்ர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது நாட்டில் விலைவாசி அதிகரிப்பினால் மக்கள் படும் துன்பங்கள், எரிவாயு வெடிப்பு, உணவு தட்டுப்பாடு என்பவற்றை குறிக்கும் முகமாக தீப்பந்தம் ஏந்தியும், விறகு கட்டுக்கள், பாண், மரவள்ளிக் கிழங்கு என்பவற்றினை ஏந்தியும் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மரவள்ளி கிழங்கு தீயில் போடப்பட்டது.
தொடர்ந்து தேனீர் இடைவேளையின்போது உறுப்பினர்களுக்கு மரவள்ளி கிழங்கும் பாணும் சம்பலும் வழங்கப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை.
கருத்துகள் இல்லை