குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!! எதிர்க்கட்சி சூளுரை
ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட “குடும்ப ஆட்சி நாட்மை அழிக்கும்” என்ற துண்டுப்பிரசுரத்தை அம்பலாந்தோட்டைப் பகுதியில் நேற்று விநியோகம் செய்யும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டு மக்கள் நெருப்புடன் கூடிய துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் நெருப்புக்கு பதிலாக நெருப்பால் எரிகின்றார்கள்.
மத்திய வங்கியின் ஆளுநர் டொலர் மாபியாவின் கைப்பாவை. அவர் நாட்டின் அனைத்துப் பிரஜைகளுடனும், ஏற்றுமதியாளர்களுடனும் விளையாடுகிறார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பணியை முன்னெடுத்த ஒருவர் பதவி விலகியுள்ளார். எனினும், நாட்டின் பொருளாதாரத்தை அழித்த குற்றத்துக்கான பொறுப்பில் இருந்து, அவர்களால் விலகமுடியாது” என்றார்.
கருத்துகள் இல்லை