கடற்கரையில் மீட்கப்பட்ட சடலத்திற்கு அருகில் வெற்றிலை மற்றும் தேசிக்காய்...!
பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு சற்று தொலைவில் கடற்கரை பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் சடலம் ஒன்றை இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்படாத இந்த சடலத்திற்கு அருகில் இருந்த வெற்றிலை ஒன்றில் சில தேசிக்காய்கள் காணப்பட்டதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பான நீதவான் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாந்திரீக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நபர் கொலை செய்யப்பட்டாரா உட்பட பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை