• Breaking News

    விலை அதிகரிப்பிற்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபையில் போராட்டம்...!

     


    தற்போது நிலவுகின்ற பொருட்களின் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால், சபையின் உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.

    வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்று உப தவிசாளர் சச்சிதானந்தம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையின் உறுப்பினர்களது கோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    போராட்டக்காரர்கள் " இன்னொரு சோமாலியா போன்று இலங்கையை மாற்றாதே, அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்காதே, நாங்கள் என்ன நாட்டினை விட்டு வெளியேறுவதா, வீடுகளில் குண்டுகளை வெடிக்க வைக்காதே, எரிபொருட்களின் விலையேற்றத்தை குறை, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை குறை என்ற கோசங்களை எழுப்பி பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன பங்குபற்றின. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad