சுன்னாகம் குமாரசாமி வீதி திறந்துவைப்பு...!
வலி தெற்கு பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து அமரத்துவம் அடைந்த குமாரசுவாமி அவர்களின் நினைவாக சுன்னாகத்தில் வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமரத்துவமடைந்த உறுப்பினரின் நினைவாக வலி. தெற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்பட்ட வீதிக்கு குமாரசுவாமி வீதி என பெயர் சூட்டப்பட்டு நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நேற்று மாலை சுன்னாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பொதுமக்கள் பாவனைக்காக குமாரசுவாமி வீதியை திறந்து வைத்ததோடு பெயர் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை