• Breaking News

    யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவி பலி...!

     


    கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


    இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், 

    மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .


    இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad