• Breaking News

    சீன தூதுவர் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்...!

     


    சீன தூதுவர், இலங்கை சீன கூட்டு முயற்சியான குயிலான் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார்.

     வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அரியாலையில் உள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

    குறித்த விஐயத்தின் போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வருகை தந்திருந்தார்.

    குறித்த விஐயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்ததோடு

    கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு இலாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad