இந்தாண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இன்று - நாசா விடுத்துள்ள எச்சரிக்கை...!
2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.
இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும் எனவும், உலகின் பல பகுதிகளில் இருந்து இது தெரியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தச் சூரிய கிரகணம் அந்தார்டிகா, தென்னாப்பிரிக்கா, அட்லாண்டிக்கின் தெற்கு பகுதிகள், அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும்.
இந்தக் கிரகணத்தை இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அந்தார்டிகாவின் யூனியன் பனிப்பாறையிலிருந்து இதனை நேரடியாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை