சங்கானையில் இருந்த கசிப்பினை மீட்ட வலி. மேற்கு பிரதேச சபையின் ஊழியர்கள்...!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்றைய தினம் (08) சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் கசிப்பினை கைவசம் வைத்திருந்தார்.
இதனை அவதானித்த வலி. மேற்கு பிரதேச சபையின் ஊழியர்கள் கசிப்பினை கைப்பற்றினர்.
கசிப்பினை கைப்பற்றியவுடன் குறித்த ஊழியர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, பொலிஸாரை அவ்விடத்திற்கு வரவழைத்து கசிப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இருப்பினும் கசிப்பினை வைத்திருந்த சந்தேகநபர் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை