விடுதலைப் புலிகளிள் மக்களை அரிசிக்கும் பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை - சுகாஷ் தெரிவிப்பு...!
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்த நாட்டிடமும் கடன் கேட்டுப் பிச்சை எடுத்திருக்கவில்லை. அதுபோல தமது மக்களையும் அவர்கள் அரிசிக்கும் பருப்புக்கும், வேற்று நாடுகளிடம் கையேந்த வைக்கவுமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது நிலங்களையோ, வளங்களையோ எந்த நாட்டிற்கும் விற்பனை செய்திருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் வெளிநாடுகளின் போர்வீரர்களைத் துணைக்கு அழைத்துப் போரிட்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்தவொரு சிங்களப் பெண்ணையும் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை.
உச்சமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், யாழ்ப்பாணம் கோட்டைப் பெருஞ்சமரின்போது கோட்டைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிங்கள இராணுவம் உண்ண உணவும் குடிக்கத் தண்ணீருமின்றித் தவித்தபோது உணவையும் நீரையும் இராணுவத்திற்கு அனுப்பி மனிதாபிமானத்தின் எல்லைவரை சென்றவர்கள் அவர்கள்.
ஆனால் நீங்களோ பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட் கொடுத்துவிட்டுச் சுட்டுப் படுகொலை செய்தவர்கள்.
இப்பொழுது கூறுங்கள் சரத் பொன்சேகா அவர்களே யார் படிப்பறிவற்றவர்கள்??? - என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Why casinos are rigged - Hertzaman - The Herald
பதிலளிநீக்குIn the nba매니아 UK, casino games are rigged and there herzamanindir is evidence 메이피로출장마사지 of fraud, crime https://octcasino.com/ or disorder or an individual's involvement. There are also wooricasinos.info many