தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்!
மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த பெண் 14 லட்சம் ரூபாய் பணத்தை வெல்லவாயவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்து வைத்துள்ளார்.
பணத்தை வேறு ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், தற்போது வைப்புச் செய்துள்ள வங்கியை விட அதிகளவான வட்டியை பெறலாம் என மகன் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண் மகனுடன் சென்று வங்கியில் இருந்து பணத்தை மீளபெற்றுள்ளார்.
பணத்தை வங்கியில் இருந்து எடுத்த பின்னர் பெண்ணின் மகன் தாயிடம் இருந்த பணத்தை பறிக்கொண்டு ஓடி விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை