• Breaking News

    தனியார் பஸ்ஸொன்று 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

     


    ஹட்டன் - சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துநரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

    இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

    சலங்கந்தை பேருந்து தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்லப் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad