முதன்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்!
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்தவுள்ளார்.
இந்த நெய் அபிஷேகம், நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை நடைபெற இருக்கின்றது.
இதற்காக 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய், லொறி ஊடாக கொண்டு வரப்பட்டு ஊழியர்கள் மூலம் தேங்காய்களில் நெய் நிரப்பப்பட்டுள்ளன.
குறித்த நெய் தேங்காய்கள், டிராக்டர் வாயிலாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை அதிகாலை ஐயப்பனுக்கு தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை