2022 ம் ஆண்டுக்கான கடமைகள் யாழ். நீதிமன்றில் ஆரம்பம்!
2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
நீதிமன்ற பதிவாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம் சங்கர் ,யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ் மாவட்ட நீதிபதி மற்றும் ஏனைய நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் யாழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை