2022ம் ஆண்டுக்கான பணிகள் யாழ். பல்கலையில் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டின் கமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் பல்கலைக்கழக நுழைவாயில் அருகில் பதில் துணைவேந்தரும், உயர் பட்டப்படிப்புக்கள் பீடாதிபதியுமான பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பீடாதிபதிகள், அலுவலர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை