Sunday, December 29.
  • Breaking News

    மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு 3 கணினிகள் அன்பளிப்பு!

     


    மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு 3 கணினிகள்  அன்பளிப்பு செய்யப்பட்டன.

    யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த  ராஜபட்சம் சிறிரங்கபட்சம் சுமார் மூன்று கணணிகளை இன்று காலை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தார்.

    பாடசாலை அதிபர்  தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாடசாலை  வளாகத்தில் இடம்பெற்றது.

    பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இவருக்கு அவருடைய நண்பர் ஒருவர்  இந்த பாடசாலை பற்றியும், தேவைகள் பற்றியும் கூறியதற்கு இணங்க, பாடசாலை அதிபருடன் கலந்துரையாடி பாடசாலைக்கு தேவையானவற்றை தெரிந்து, அதில் மாணவர்களுக்கு பிரதானமாக தேவையான கணிணிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

    கிராம மட்டத்தில் மிகவும் பின் தங்கிய பாடசாலையாக இந்த பாடசாலை விளங்குகின்ற நிலையில் கூட தகவல் தொழில் நுட்ப பாடத்தில்  இப்பாடசாலை மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதும் குறிப்பிடத்தக்கது.









    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad